செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (13:56 IST)

காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தான் கமல்: வானதி சீனிவாசன்

காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தான் கமல்:  வானதி சீனிவாசன்
காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தான் கமல்ஹாசன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநில தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
 
இந்த அழைப்பை ஏற்று அவர் கர்நாடகம் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய போது ஊழல் கரைப்படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் என்று தெரிவித்தார். 
 
கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டனர் என்பதும் இந்த தேர்தலில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran