வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (11:22 IST)

மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததில் தவறு இல்லை: அமைச்சரின் அதிகார பேச்சு!

மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததில் தவறு இல்லை: அமைச்சரின் அதிகார பேச்சு!

பெரியார் பழகலைக்கழக இதழியல் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததில் தவறு ஏதும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.


 
 
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் ஓஎன்ஜிசி செயல்படுத்தி வரும் திட்டம் போன்றவற்றிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த போராடி வந்தவர் மாணவி வளர்மதி.
 
பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வரும் மாணவி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரது கைதுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் வளர்மதி மீது போடப்பட்டிருக்கும் வழக்கை வாப்பஸ் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 
மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சீமான், விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவர் நஜ்மா பேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சரியா என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சிண்முகம், குண்டர் சட்டத்தில் வளர்மதியை கைது செய்ததில் தவறு இல்லை என அதிகாரபோக்குடன் பதில் அளித்தார். மேலும் தமிழக அரசுக்கு எதிராக ஒரு தவளை குரல் கொடுத்தாலும் அந்த தவளையை ஓபிஎஸ் ஆதரிப்பார் என்றும் கூறினார் அவர்.