1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (10:24 IST)

மத்திய அமைச்சரவையில் அதிமுக? வைத்திலிங்கம் பேட்டி!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் என தெரிகிறது. எனவே, மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி, மத்திய மந்திரி சபையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற எண்ணம் எனக்கு கிடையாது. மத்திய மந்திரி சபையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை என தெரிவித்துள்ளார்.