சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம்: புதிய கல்விக்கொள்கை குறித்து வைரமுத்து
மத்திய அரசு நேற்று புதிய கல்வி கொள்கை குறித்த வழிமுறைகளை அறிவித்தது என்பதும் இந்த அறிவிப்புக்கு அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து புதிய கல்வி குறித்து தனது கருத்தை டுவிட் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.
வைரமுத்துவின் இந்த கருத்துக்கு தமிழறிஞர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அனைத்து வகை பள்ளிகளுக்கும் தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்