செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (11:42 IST)

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச்.ராஜா போர்க்கொடி

ஆண்டாள் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

 
தினமனி நாளிதழ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
எனவே, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா “இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.