வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (15:57 IST)

என் அண்ணனுக்கு மனநோய்: வைகுண்டராஜன் சீற்றம்!

என் அண்ணனுக்கு மனநோய்: வைகுண்டராஜன் சீற்றம்!

தென் மாவட்டங்களில் தாது மணல் எடுத்து வரும் வைகுண்டராஜன் 10 ஆயிரம் கோடி அளவுக்கு தாது மணல் எடுத்து அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன் பேட்டியளித்தார்.


 
 
இதனையடுத்து, இதற்கு பதிலளித்துள்ள வைகுண்டராஜன், தன் அண்ணன் குமரேசனுக்கு மூளைக்கோளாறு இருப்பதாகவும், அதனால்தான் தன் மீது அவதூறுகளை கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
தனது அண்ணன் குமரேசன் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த வைகுண்டராஜன் தனது அண்ணன் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு கடற்கரையிலுள்ள மணலை மட்டுமே தாங்கள் ஏற்றுமதி செய்து வருவதாகவும், இதற்கான கட்டணத்தை முறையாக அரசுக்கு செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.