வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (09:31 IST)

சிறையில் வைகோ திடீர் மௌன விரதம்: காரணம் என்ன?

சிறையில் வைகோ திடீர் மௌன விரதம்: காரணம் என்ன?

தேசத் துரோக வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து மௌன விரதம் இருந்து வருகிறார். அவரது தந்தையார் வையாபுரியின் நினைவு தினத்தையொட்டி அவர் இதனை கடைபிடிக்கிறார்.


 
 
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட வைகோ புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
சிறையில் உள்ள வைகோவுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், ஒரு மின்விசிறி, கட்டில், தலையணை, நாற்காலி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பதற்காக தினமும் ஒரு ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன.
 
இந்நிலையில் சிறையில் உள்ள வைகோ இன்று காலை 6 மணி முதல் மௌன விரதம் இருந்து வருகிறார். வைகோவின் தந்தை வையாபுரி ஏப்ரல் 5-ஆம் தேதி மறைந்ததையடுத்து கடந்த 44 வருடங்களாக வைகோ ஏப்ரல் 5-ஆம் தேதி மௌன விரதத்தை கடைபிடித்து வருகிறார்.
 
இதனால் தற்போது புழல் சிறையில் மௌன விரதம் இருந்து வரும் வைகோ தண்ணீர் கூட குடிக்காமல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன விரதம் கடைபிடிக்கிறார்.