1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (09:04 IST)

வைகோவுக்கு நன்றி கூறிய பீகார் முதலமைச்சர்

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுதிய கடிதத்திற்கு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இது குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏப்ரல் மாதத்தில் இருந்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்ததைப் பாராட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்.
 
வைகோவின் கடிதத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தியதற்கு தாங்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உங்களுடைய நல்வாழ்த்துகள் பீகார் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் நாங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.