செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (22:16 IST)

திமுக தலைவர் கருணாநிதியை, மீண்டும் சந்தித்த வைகோ

திமுக தலைவர்க் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சையும் ஓய்வும் பெற்று வரும் நிலையில் அவரை கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் கூட அரசியலில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தார்

இந்த நிலையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதியை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று மீண்டும் கருணநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்

கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'திமுகவுக்கு மதிமுக எப்போதும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்றும், இமை பொழுதும் நீங்கமல் என்ன இயக்கியவர் திமுக தலைவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார். மேலும் செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலத்தை மட்டுமே விசாரித்ததாகவும், அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் வைகோ தெரிவித்தார். இந்த சந்திப்பின் மூலம் திமுக-மதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.