வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (11:21 IST)

வேரோடு அல்ல வேரடி மண்ணோடும் சாய்ப்போம்: இந்தி ஆதிக்கத்தால் கொதித்த வைகோ!

கனிமொழியை இந்தியரா என கேட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பல கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பதான பிம்பம் கட்டமைக்கப்படுகிறதா என்பது குறித்து எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியர்தானே என திரும்ப கேட்டார். இந்தி பேசினால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் இதற்கு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வைகோ, இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடிமுதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம் என கூறியுள்ளார். 
 
அதோடு எம்.பி. தயாநிதி மாறன், விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம். அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.