1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:25 IST)

வெள்ள நிவாரண நிதி.. உதயநிதியிடம் வடிவேலு கொடுத்த தொகை..!

அமைச்சர் உதயநிதியை சந்தித்து நடிகர் வடிவேலு வெள்ள நிவாரண நிதி கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
திரையுலக பிரபலங்கள் பலர் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோர் தலா 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு உதயநிதி சந்தித்து 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.  
 
இது குறித்து உதயநிதி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
Edited by Mahendran