1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (09:31 IST)

எக்கச்சக்க கூட்டம்.. இன்றும் சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train
இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் இன்றும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.



இன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை – திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மாலை 18.30க்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K