புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : சனி, 25 மே 2024 (19:07 IST)

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று நாமக்கலில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு  வருகை தந்தார். 
 
ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டரி கார் மூலம் கருடாழ்வார் சன்னதிக்கு வருகை தந்த அவர் கருடாழ்வரை  தரிசனம் செய்துவிட்டு பெரிய பெருமாளை தரிசனம் செய்தார். 
 
இதனை தொடர்ந்து நடந்தே சென்று ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்தார். பின்னர் கம்பர் மண்டபத்தில் 5 நிமிடம் அமர்ந்தார். அதன் பின்பு இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கோர்ட் யார்ட் விடுதியில் தங்கினார்.
 
அதிகாலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்துவிட்டு  சக்தி தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்றதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அவர் கொடி மரத்தை வணங்கி விட்டு மூலவர் சமயபுரம் மாரியம்மனை சாமி தரிசனம் செய்தார்.
 
அதனைத் தொடர்ந்து  விநாயகரையும், உற்சவர் மாரியம்மனையும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தில் 5 நிமிடம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு சமயபுரம் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.