1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (12:08 IST)

"உமேஷ் சச்தேவ்-கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

"உமேஷ் சச்தேவ்-கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர் உமேஷ் சச்தேவ்கு மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் வழங்க முன்வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில் உள்ள யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் உமேஷ் சச்தேவ், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 25 மொழிகள் மற்றும் 150 பேச்சு வழக்குகளை புரிந்து கொண்டு, மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய வகையிலான செல்போன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
 
உமேஷ் சச்தேவ்-வை நான் மனதார வாழ்த்துகிறேன். அவருக்கு,  ஊக்கமளிக்கும் வகையில் மாநில அரசும், மத்திய அரசும் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.