திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (11:33 IST)

உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்! - வீடியோவால் திமுக தர்மசங்கடம்!

Udhayanithi Stalin
தஞ்சாவூர் சென்ற உதயநிதியின் காலில் மாநகராட்சி மேயர் விழுந்து வணங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.எல்.ஏவும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். முதலில் கும்பகோணம் சென்ற அவர் அங்கு அறிவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் சென்ற அவர் அறிவாலயத்தில் அண்ணா, கலைஞர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தஞ்சை மாநகராட்சி அலுவலகம் சென்ற அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் இராமநாதன், மேயர் அங்கியுடன் சென்று உதயநிதி காலில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் கட்சி சார்ந்தவர்களுக்கே இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.