1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (19:24 IST)

திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி

திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி
சீமானின் நாம் தமிழர் கட்சியின் வலதுகரமாக இருந்த ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கட்சியிலிருந்து விலகினார். சீமான் அவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி தாகவும் கூறப்பட்டது 
 
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி அவ்வப்போது அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் என்பது கூறப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி வேறு ஒரு அரசியல் கட்சியில் சேர இருப்பதாகவும் இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி திமுகவில் இணைய இருப்பதாகவும் நாளை அவர் முக ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது