திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (23:12 IST)

நீட் அனிதா குறித்து உதயநிதியின் நெகிழ்ச்சியான டுவீட்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத வெறுப்பில் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க முடியவில்லை
 
இந்த நிலையில் அனிதா வீட்டிற்கு சமீபத்தில் சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அனிதாவின் உருவப்படத்திற்கும், சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அனிதாவின் வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த ‘அனிதா நூலகம்’ சென்று அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன். என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.