ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (13:00 IST)

உதயநிதி ஸ்டாலினுடன் நேரடி விவாதத்துக்கு நான் தயார்- ஆர்.பி.உதயகுமார் சவால்

udhayakumar
உதயநிதி ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய நான் தயார் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சவால் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு தயாரா என சவால் விட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் என்னை விவாதத்திற்கு கூப்பிட்டால் நான் வர தயார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரை பார்த்து சவால் விடுகிறார்? 2 கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். முதலமைச்சர் மகனான உங்களுடன்  விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவுக்கு உதயநிதி தகுதியும் அனுபவமும் இன்னும் வரவில்லை என்றும், சவால் விடுவது என்பது முக்கியமில்லை, மக்களை காப்பது தான் முக்கியம் என்பதை உதயநிதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Edited by Mahendran