உண்மையை ஒத்துக்கிட்டு சரண்டர் ஆகுங்க மிஸ்டர் எடப்பாடியார்! –முக ஸ்டாலின் கண்டனம்
விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முக ஸ்டாலின் விவசாயிகளிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளையும் மீறி விவசாய மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்து விவசாயிகளுக்கு அதிமுக அரசு துரோகமிழைத்து விட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் அதில் “விவசாய மசோதாவை ஆதரித்திருப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மோசமானது. பதவியை காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக்கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே வழி” என்று கூறியுள்ளார்.
விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவசாய மசோதா அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது