1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanidhi says about neet exam

நீட் தேர்வு போராட்டத்தில் நிச்சயம் திமுக வெற்றி பெறும்: அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வு
நீட் தேர்வு போராட்டத்தில் நிச்சயம் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது ’நீட் தேர்வை தமிழகத்திலிருந்து வெளியேற்றும் போராட்டத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார். 
 
நீட் தேர்வு என்பது திமுகவின் பிரச்சனையை அல்ல என்றும் ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்சனை என்றும் அவர் கூறினார். ஆறு வருடங்களில் 22 மாணவர்கள் நீட் தேர்வினால் தமிழகத்தில் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறிய அவர் சில போராட்டங்கள் காலதாமதம் ஆகலாம். ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும் பாலைவனமாக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி- டி.டி.வி. தினகரன்