1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (12:44 IST)

உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்- அமைச்சர் ரகுபதி

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர்.  நடிகர் விஜய்யின் குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பின்னர், ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு, நீர் பறவைகள்,  படத்தை தயாரித்திருந்தார்.

அதன்பின்னர், விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசப்பட்டினம், டான் , வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்களை  விநியோகித்திருந்தார்.

இதற்கிடையே ஆதவன் படத்தில் பணியாள் உதவியாளராக அறிமுகமான உதய நிதி, ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகி கெத்து, இப்படை வெல்லும்,  நிமிர், கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதையடுத்து,  கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற உதயநிதிக்கு சமீபத்தில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர்   மாரி செல்வராஜ் இயக்கத்தில்  நடித்த மாமன்னன் என்ற படம்தான் கடைசிப் படம் என்று கூறியிருந்தார்.

இன்று வெளியாகி இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ‘’அமைச்சராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது. மாமன்னன் தன் கடைசிப் படம் என்று கூறியிருப்பதை உதய நிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்! இப்படம் தடைகள் எல்லாம் தாண்டி வெற்றி பெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.