தொடர்புடைய செய்திகள்
- “கேரக்டர் ரோல் கொடுத்தா கூட போதும்” - உதயநிதி ஸ்டாலின்
- அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள் - இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை?
- உதயநிதி நடிப்பில் நிமிர் டிரெய்லர்
- ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
- டிவிட்டரில் டிரெண்டான ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ - வைரல் மீம்ஸ்
எல்லோரும் வருகிறார்கள் ; இனிமேல் தீவிர அரசியல்தான் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி
நடிகர் அரசியலுக்கு தொடர்ந்து வருவதால் தானும் தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது தாத்தா கருணாநிதி முதல் தந்தை ஸ்டாலின் வரை குடும்பத்தில் பலரும் அரசியலில் இருந்தாலும், சினிமா தயாரிப்பு துறையில் நுழைந்து, பின் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டவர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே திமுகவி இருக்கிறேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு வந்தேன். தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்குகள் சேகரித்துள்ளேன். ஆனால், சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அரசியலை விட்டு விலகி இருந்தேன். இப்போது, பல நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே, நானும் தீவிர அரசியலுகு வரும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
