1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (21:49 IST)

பைக் திருடிய பள்ளி மாணவர்கள் கைது!

பைக் திருடிய பள்ளி மாணவர்கள் கைது!

சென்னை புழல் பகுதியில் பைக் திருடியதாக இரண்டு பள்ளி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பத்து மற்றும் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர்.


 
 
நேற்று முன்தினம் புழல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தலைக்கவசம் இல்லாமல் பைக்கில் வந்த இரண்டு மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளனர்.
 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர், அதில் இருவரும் பைக் திருடி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஓர் திருட்டு பைக்க போலீசார் மீட்டனர்.
 
பள்ளியில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்த போலீசார் சிறுவர் நீதிமன்ற குழுவின் முன்னர் ஆஜர்படுத்தியுள்ளனர்.