50 ரூபாய்க்கு மட்டன் பிரியாணி, அதுவும் ரெண்டு கேட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் – சிசிடிவி கலவரக் காட்சி !

Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (15:25 IST)
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஆட்டோ ஓட்டுனர்கள் தகராறு செய்ய அவர்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகில் காஜா பிரியாணி கடை  செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு குடிபோதையில் அங்கு வந்த இரு ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு மட்டன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார்கள். கடை ஊழியரும் கட்டி விட்டு 300 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ 50 ரூபாயைக் கொடுத்து பிரியாணியைக் கேட்க ஊழியர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் அவரை தாக்கியுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் கலீம் அங்கு வர அவரையும் தாக்கியுள்ளனர். அதன் பின் ஹோட்டல் நிர்வாகிகள் பதிலுக்குத் தாக்க அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பிறகு போலிஸுக்கு இது சமம்ந்தமாக தகவல் தெரிவிக்கப்பட கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயபாரத், செல்வபிரபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :