திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:17 IST)

மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

holiday
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த 24 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை.
 
 இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின்படி தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 
 
அதேபோல் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் இன்று இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva