வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:34 IST)

கொடைக்கானல் சுற்றுலா.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற நான் திருச்சி, சென்னையை சேர்ந்த இருவர் சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் இருவரும் உயிர் இழந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கி, கொடைக்கானலை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது தங்கி இருக்கும் விடுதியில் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க ஏற்பாடு செய்து கொண்டனர் என்பதும் சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து வந்தவர் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து கொடைக்கானலில் தங்கி இருந்த நான்கு இளைஞர்களும் சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் அதில் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து கொடைக்கானல் வந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் உயிரிழந்ததாக தெரிகிறது.
 
இது குறித்து காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை  காரணமாக மூச்சுமுட்டி இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுப்பை அணைக்காமல் இருந்ததன் காரணமாக உயிர் இழப்பா? அல்லது சிக்கன் சாப்பிட்டதால்  தான்  உயிர் இழப்பா?  என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran