அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகராகலாமா? டுவிட்டர் பயனாளியின் ஒரு கருத்து!

temple
அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகராகலாமா? டுவிட்டர் பயனாளியின் ஒரு கருத்து!
mahendran| Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (21:56 IST)
அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகராகலாம் என அமைச்சர் சேகர் பாபுகூறியது குறித்து டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகனும் - சேகர்பாபு

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராதான் இருக்காங்க, ஆனா, எல்லா கோயில்லயும் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகிட முடியாது அமைச்சரே

இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,000 ற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் அதில் அதிகபட்சம் ஒரு 3000 கோவில்களில்தான் பரம்பரை அர்ச்சகர்களாக பிராமணர்கள் இருப்பார்கள், மீதமுள்ள அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான், அதாவது அனைத்து சாதியினரும் ஏற்கனவே இங்கே அர்ச்சகர்களாகத்தான் இருக்கிறார்கள் புரிகிறதா? எனது குலதெய்வமான தேவதானப்பட்ட அருள்மிகு மூங்கிலனை ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோவில்தான் இந்தக் கோவிலில் பரப்பரை அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தேவர் இனத்தினரும், செட்டியார் இனத்தினரும்தான்
பழனிக்கு அருகில் நெய்க்காரபட்டியில் புகழ்பெற்ற கோர்ட்பத்திரகாளி மற்றும் மண்டுகாளியம்மன் ஆகிய இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட இரண்டு கோவில்களிலும் தேவேந்திரகுலத்தவர் பூஜை செய்கிறார்கள், பழனி மலைமீது பூஜை செய்யும் பிராமணர்கள் கூட இந்தக் கோவில்களில் கருவறையில் நுழைய முடியாது

அவ்வளவு ஏன் பழனியில் பூஜை செய்யும் பிராமணர்கள் கூட திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்துவிட முடியாது அந்தக் கோவில்களில் பூஜை செய்பவர்கள்தான் நுழைய முடியும். இந்தக் கட்டமைப்பை எதற்காக இவர்கள் மாற்ற நினைக்கிறார்கள்?-
கோவில்களில் பூஜை செய்வதென்பது TNPSC தேர்வெழுதி வரும் பதவி போன்றதல்ல அது சேவை வெறும் ஒன்றரை வருட பயிற்சி முடித்தவர்களை பாரம்பரியமிக்க கோவில் கருவறைகளுக்குள் அனுப்பதிப்பதென்பது இந்துமதத்தை கொலை செய்வதற்குச் சமமானதாகும்-

மேலும், இந்த அர்ச்சகர் படிப்பு முடித்த 240 நபர்களின் செயல்பாடுகள் நமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன இந்துக்கள் புனிதமாக மதிக்கும் ருத்ராக்ஷமாலைகளைக் கழற்றி தெருவில் வீசி போராட்டம் செய்கிறார்கள் இவர்கள், இந்து கடவுள்களை தனது வாழ்நாளெல்லாம் அவமதித்த ஈவேராவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள் இவர்கள் -
இதே, தி.மு.கவின் சதியால்தான் இன்று இந்து அறநிலையத்துறையில் 40% ற்கும் அதிகமாக மாற்று மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் வேலைகளில் அமர்ந்து கோவில்களை சீரழித்து வருகிறார்கள், இன்று பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் மாற்றுமதத்தினர் வசம் இருப்பதற்கு இவர்களே காரணம்-

இன்று அனைத்து சாதியினரும் அர்சகர் ஆக்கும் திட்டம் என்று கூறி கிறிப்டோ கிறிஸ்தவர்களை கோவில் கருவறைக்குள் நுழைக்கும் மிஷநரி ஏஜென்ட் தி.மு.க.வின் சதியாகவே தோன்றுகிறது -
மிஷநரிகளின் இருநூறு ஆண்டுகால திட்டம் பிராமணர்களை ஒழிப்பது அதன்மூலம் கோவில்களை அழிப்பது இதில் இவர்களே இன்றுவரை வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை நாம் விட்டுவிடக் கூடாது. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இதைவிட்டுவிட்டு தமிழகம் ஆயிரக்கணக்கான பழைமையான கோவில்கள் பாழடைந்து ஒரு வேளை பூஜைக்குக் கூட வழியின்றிக் கிடக்கின்றன அவற்றை சீரமைத்துக்கட்டி அதில் புதியதாக எந்த இந்து ஜாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக்குங்கள் புண்ணியமாவது கிடைக்கும் மாறாக, உங்களது ஹிந்துமத வெறுப்பை எங்களிடம் காட்டினால் இனியும் நாங்கள் பொறுமையாக இருக்கப்போவதில்லை-
ஹிந்து உணர்வாளர்களே, இதை ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமேயான பிரச்சினையாகப் பார்க்காமல் தயவுசெய்து ஹிந்துதர்மம் காக்க ஒன்றுசேருங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :