வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (12:20 IST)

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாளில் ...

எந்தெந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவில்லை என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தகவல். 

 
சாலிகிராமத்தில் உள்ள சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை அறநிலையத்துறை மீட்டுள்ளது. சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு, கோவில் சொத்துகளை மீட்டு எடுப்பதுடன் குற்றம் செய்தவர்கள் மீது பாகுபாடில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல எந்தெந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவில்லை என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார்.
 
மேலும், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.