வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (20:22 IST)

கரூர் கலெக்டர் கோவிந்தராஜின் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆய்வு!!

தமிழக அளவில் டெங்கு பாதிக்காத மாவட்டமாக கரூர் தற்போது வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உள்ளதற்கு மாவட்ட ஆட்சியரின் தீவிர ஆய்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


டெங்கு இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்கி கரூர் மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தும் தனியார் ரத்த பரிசோதனை மையம் ஒரு புறம். கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் தொடர்ந்து டெங்கு கொசுக்கள் உள்ளனவா? இல்லையா? என்று நேரடி கள ஆய்வு மேற்கொண்டதோடு, ஆங்காங்கே அறிவுரையும் கூறி வருகிறார்.
 
மாவட்ட ஆட்சியர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சீரிய முயற்சியில், மற்ற துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் ஒத்துழைப்பினால் டெங்கு இல்லாத மாவட்டமாக பெயர் எடுத்துள்ளது. 
 
கரூரில் உள்ள ஒரு தனியார் ரத்தப்பரிசோதனை நிலையமானது, டெங்கு உள்ளது என ஒரு குழந்தைக்கு அறிவித்தது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் என்ன நடவடிக்கை என்று கேட்டால், தலையே சுற்றும் அளவிற்கு அந்த செயல் ஏற்பட்டுள்ளது. 
 
ரமேஷ் என்பவர் கரூர் நகரில் இரண்டு லேப்களை நடத்தி வருகிறார். அந்த லேபில் டெஸ்ட்டிற்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து டெங்கு காய்ச்சல் உள்ளது என்றும் பிளேட் ரேட் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.
 
இதையடுத்து அந்த லேபின் உரிமையாளர் ரமேஷ் தவறான தகவல் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த தகவலை கேட்டு, அனைத்து லேப் டெக்னீஸியன்களுக்கும், லேபிற்கும் சரியான தகவல்களை டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கூறும் படியும், தவறான தகவல்கள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
ஆனால் அந்த எச்சரிக்கையும் மீறி தற்போது ஒரு சில தனியார் லேப் டெக்னீசியன்கள் தவறான தகவல்கள் அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரின் தொடர் நடவடிக்கையால் டெங்கு கொசுக்களோடு, டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இது போன்ற அனுபவம் இல்லாத மற்றும் அரசிற்கு எதிராக டெங்கு இருப்பதாக கூறி வரும் லேப்பினால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 
 
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு துணை போகும் லேப்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தனியார் லேப் வைத்து அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.