ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (14:40 IST)

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தனியாக வரும் விஜய்யின் ‘கோட்’!

தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் செப்டம்பர் 5 ஆம் தேதி பேன் இந்தியன் ரிலீஸாக வரும் கோட் படத்துக்கு எந்தவொரு போட்டியும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.