1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (14:58 IST)

மெட்ரோ ரயிலுக்காக 800 ஆண்டு பழமையான கோவில் இடிக்கப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்

metro
மெட்ரோ ரயில் பணிகளுக்காக 800 ஆண்டு பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாக கவுதமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது புராதன சின்னங்கள் பழமையான கோயில்கள் பாதிக்கப்படாத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது 
 
இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva