வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (09:54 IST)

பிரதமர் மோடிக்கு முன்னாள் ஆளுநர் திடீர் எச்சரிக்கை! பெரும் பரபரப்பு!

modi
பிரதமர் மோடிக்கு முன்னாள் ஆளுநர் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் என்பவர் திடீரென பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் பதவி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்று பிரதமர் பதவியிலிருந்து ஒருநாள் யாராக இருந்தாலும் விலக வேண்டி வரும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இனி வரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள் என்றும் அதனால் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மேகாலய மாநில ஆளுநர் பிரதமர் மோடிக்கு எச்சரித்துள்ளார் 
முன்னாள் ஆளுநர் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயா ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், பிரதமர் மோடியுடன் வாக்குவாதம் செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva