செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:58 IST)

லடாக்கில் தூத்துகுடி ராணுவ வீரர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்!

லடாக்கில் தூத்துகுடி ராணுவ வீரர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
இந்திய எல்லையான லடாக்கில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் சோகமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
 
மேலும் லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் லடாக் விபத்தில் ராணுவ வீரர் கருப்பசாமி உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.