திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:34 IST)

ஆர்.கே.நகர் போல பட்டன் தேயும் அளவுக்கு குக்கரில் வாக்களியுங்கள்: டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்..!

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு எப்படி பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தார்களோ, அதேபோல் தேனி தொகுதியில் வாக்காளியுங்கள் என டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா நேற்று உசிலம்பட்டியில் வாக்கு கேட்டபோது ’ஆர்கே நகரில் கிடைத்தது தான் இந்த குக்கர் சின்னம், அங்கு பட்டன் தேயும் அளவுக்கு வாக்களித்தார்கள், அதேபோல தேனி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்

இந்த தொகுதிக்காக நீங்கள் எதையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, 14 ஆண்டுகளுக்கு முன் இந்த தொகுதிக்கு என்ன செய்தாரோ, அதைவிட அதிகமாக செய்வார், அவர் என்னுடன், மகளுடன் இருந்ததைவிட உங்களோடு இருந்தது தான் அதிகம் என்று தெரிவித்தார்

 குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் சின்னம் போன்றது ,  தினசரி பால் சாப்பாடு குக்கரில் தான் வைப்போம், அந்த குக்கர் மாதிரி தான் அவருடைய முகமும் குண்டாக இருக்கும், அவரை பார்க்கும் போது எல்லோருக்கும் குக்கர் ஞாபகம் வர வேண்டும், குக்கருக்கு போடும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் வளர்ச்சிக்கான வாக்கு’ என்று அவர் ஜாலியாக பேசினார்.

Edited by Siva