திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (15:20 IST)

டிடிவி தினகரன் எனக்கு போட்டியே இல்லை.. அதிமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி: தங்க தமிழ்செல்வன்..!

Tamilselvan
தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அம்மா மக்கள்   முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் தனக்கு போட்டியே இல்லை என்றும் தனக்கு போட்டி அதிமுக மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

தேனி தொகுதியில் பகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதி வரும் நிலையில் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல் தங்க தமிழ்செல்வனும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் பேசியபோது ’தேனி தொகுதியில் எனக்கும் அதிமுகவும் தான் போட்டி என்றும் அமமுக எங்களுக்கு போட்டியே கிடையாது என்றும் தெரிவித்தார்

திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் உள்கட்டமைப்பு நன்றாக உள்ளது என்றும் டிடிவி தினகரனுக்கு உள்கட்டமைப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பத்திரிகைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு டிடிவி தினகரன் தனக்கு ஆதரவு இருப்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திக்கிறார் என்றும் அது வாக்குப்பதிவின்போது எடுபடாது என்றும் தெரிவித்தார்

ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கியது டிடிவி தினகரன் தான் என்றும் அதனால் தான் தர்மயுத்தம் நடத்தப்பட்டது என்றும் அவரை முதல்வராக இருக்க வைத்திருந்தால் அப்படியே ஐந்து ஆண்டுகள் நன்றாக ஓடியிருக்கும் என்றும் டிடிவி தினகரன் சசிகலா கூட்டம் தான் சதி செய்தது என்றும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran