திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 11 ஜனவரி 2020 (13:23 IST)

எந்தெந்த இடங்களில் எத்தனை வெற்றி? அமமுக லிஸ்ட் இதோ...

அமமுக எந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற கணக்கீடு வெளியாகியுள்ளது. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் முடிவடைந்து தற்போது மரைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  
 
இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 95 இடங்களை அமமுக பெற்றுள்ளது.  
 
அதில், தூத்துக்குடியில் 14 இடங்கள், தஞ்சாவூரில் 10 இடங்கள், சிவகங்கையில் 8 இடங்கள், மதுரையில் 7 இடங்கள், திருவண்ணாமலையில் 6 இடங்கள், கடலூரில் 5 இடங்கள், தேனி 5 இடங்கள், புதுக்கோட்டையில் 5 இடங்களை பெற்றுள்ளது. 
 
அமமுகவின் இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக பார்கப்படுகிறது ஏனெனில் திமுக, அதிமுகவை அடுத்து வெற்றி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை அமமுக பெற்றுள்ளது.  
மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கடும் சறுக்கலை சந்தித்த அமமுக தற்போது மோசமாக தோற்காமல் நல்ல நிலையில் வெற்றிகளை குவித்து வருவது அமமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.