வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (15:35 IST)

பேரறிவாளனுக்கு ஜாமீன் - மகிழ்ச்சி தெரிவித்த சசிகலா!

பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக சசிகலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

 
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்ஃப் பேரறிவாளன் என்பதும் அவருக்கு கடந்த சில மாதங்களாக தமிழக அரசு பரோல் வழங்கி வந்தது என்பதும் தெரிந்ததே.
 
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் திறமையான வாதத்தால் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. 
 
இந்நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக சசிகலா தனது கருத்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவரும் விடுதலை பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.