செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (11:00 IST)

ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்: டிடிவி. தினகரன் பிரச்சாரம்

ஜெயலலிதா இன்று நம்மிடைய இல்லையென்றாலும் ஜெயலலிதா இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை ஆனால் ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார் என்று கூறியுள்ளார்

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்த நிலையில் பிரதமர் மோடி ஆட்சி செய்த காலத்தில் தான் பொருளாதார உயர்ந்துள்ளது என்றும் உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இன்று இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நீங்கள் கொடுக்கும் வெற்றி 2026 ஆம் ஆண்டில் மக்கள் விரோத ஆட்சியை ஒழித்துக்கட்டும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றும் அவர் பேசினார்

மேலும் ஜெயலலிதா என்று நம்மோடு இல்லை என்றாலும் ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார் என்றும் அவரது கூட்டணியை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் பேசினார்.


Edited by Mahendran