புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (15:57 IST)

அனுமதி கேட்ட எம்.எல்.ஏ – ஆசீர்வதித்து அனுப்பி வைத்த தினகரன்

அமமுக கூடாரம் காலி ஆகிவிட்டதாக பலரும் பேசி வரும் நிலையில் தினகரனின் சில செயல்பாடுகள் இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் அதிமுக-வில் இருப்பதாக கூறி வந்தார். அவரது இந்த பேச்சை கேட்டு யார் அந்த ஸ்லீப்பர்செல் என்று அதிமுக அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே திரிந்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தினகரனின் உறவினர் திவாகரனுக்கு நெருக்கமான உணவுத்துறை அமைச்சர் காமராஜை கண்டுகொள்ளாமல் இதுநாள் வரை அதிமுக இருப்பதும் அதிசயமாகவே இருக்கிறது.

தற்போது அமமுக-விலிருந்து 3 எம்.எல்.ஏ-க்கள் விலகி சென்று அதிமுக-வில் இணைந்தனர். இதனால் அமமுக மொத்தமாக நொடித்து போய் விட்டது என்று பேசப்பட்டது. இதுபற்றி தினகரனிடம் கேட்டால் அவர் ரொம்ப கூலாக “இப்போது அதிமுக-வுக்கு சென்ற மூன்று எம்.எல்.ஏக்களும் என்னிடம் சொல்லிவிட்டுதான் அமமுக-விலிருந்து விலகினார்கள்” என்று கூறியுள்ளார்.

இது அதிமுக பெருந்தலைகளுக்கு கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. வந்தவர்கள்தான் உண்மையான ஸ்லீப்பர்செல்களாக இருப்பார்களோ என்று சந்தேகத்தோடே சுற்றி வருகிறார்களாம்.