சசிகலா சென்னை சிறைக்கு மாற்ற முயற்சியா?: என்ன சொல்கிறார் தினகரன்


bala| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:03 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 


நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் கார் மீது பெங்களூரில் தாக்குதல் நடந்தது. சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு நடந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட 6 வாகனங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு கருதி சென்னை சிறைக்கு மாற்றுவதற்காக சசிகலா தரப்பினரே இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி எந்த முயற்சிகளும்  எடுக்கவில்லை என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :