வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:16 IST)

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி..!

TTF Vasan
ஆபத்தான முறையில் பைக்கை இயக்கியதாக பிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்த நிலையில் சமீபத்தில் அவர் பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார் 
 
இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று  காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு என்று தள்ளுபடி செய்யப்பட்டது
 
Edited by Mahendran