வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:38 IST)

தெருச் சண்டையில் ஈடுபட்டுநேரத்தை வீணாக்க மாட்டோம்: திருச்சி சிவா எம்பி

Trichy Siva
தெருச் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க மாட்டோம் என்றும் நாங்கள் வீரர்கள் எல்லையை காப்போம் என்றும் திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் நடந்த திமுக சமத்துவ திருவிழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி சிவா ஆவேசமாக பேசினார். இன்று முதலமைச்சர் தந்துள்ள அறிக்கை அண்ணா வழியில் கொடுத்திருப்பது என்றும் நாங்கள் வீரர்கள் என்றும் எல்லையில் நின்று மக்களை காப்போம் என்றும் தெருச் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் சென்னையில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்கியது திமுக தான் என்றும் இந்தியாவின் தொழில் நகரமான மும்பையில் இன்று குடிசைகள் உள்ளது என்றும் ஆனால் சென்னையில் அந்த நிலை பல ஆண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் சமமான மரியாதை என்பதை நடைமுறைப்படுத்திய தேதிமுக என்றும் திருச்சி சிவா கூறினார்