திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (11:57 IST)

மணிப்பூர் விவகாரத்தில் கடும் அமளி: ஜூலை 31ம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் காரணமாக தொடர்ச்சியாக அமளி ஏற்பட்டு வருவதை அடுத்து ஜூலை 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்களவையும் ஒத்திவைக்க பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  
 
ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய நிலையில் ஜூலை 19ஆம் தேதி மணிப்பூர்  பெண்கள் பாதிக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva