1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:37 IST)

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்!? – பயணிகள் வெளியேற்றம்!

திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் நடந்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததால் நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் பலத்த பாதுகாப்பில் உள்ளன.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மர்ம போன் கால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி வெடிக்குண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் குண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.