1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (17:08 IST)

கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்ற கூடாது.. ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவு..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை மேலும் கூறியதாவது:
 
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. 
 
ஆம்னி பேருந்துகள், தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை குறிப்பிட வேண்டும்’ என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran