1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (11:07 IST)

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள்: டெண்டர் அறிவிப்பு..!

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்ய போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும், இதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கும்பகோணம் உட்பட பல்வேறு வழித்தடத்தில் ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேர்களை நியமனம் செய்வதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு போக்குவரத்து சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் பணி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் வெளியானதை அடுத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran