திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (15:10 IST)

பசுமை வீடு வேண்டி ஆட்சியர் அலுவலகம் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள்  தனியாருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். 
 
அவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 
 
எனவே திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.