1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (09:34 IST)

விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது சோகம்! டிராக்டர் கவிழ்ந்து சிறுவர்கள் பரிதாப பலி!

Accident

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விநாயகரை கரைத்து விட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் பலியான சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் குட்டி விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து வழிப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளையும் பலர் தெருக்களில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

 

தேனி மாவட்டத்தில் தேவாரம் அருகே அவ்வாறு வைக்கப்பட்டு வழிபடப்பட்ட விநாயகர் சிலையை நேற்று கொண்டு சென்று ஆற்றில் கரைத்துள்ளனர். இதற்காக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் சென்றுள்ளனர். சிலையை கரைத்து விட்டு டிராக்டரில் திரும்ப வந்துக் கொண்டிருந்தபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
 

 

இந்த விபத்தில் மறவப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஷால், நிவாஸ், கிஷோர் ஆகிய மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K