திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (11:54 IST)

அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலம்? – போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!

traffic police
மது அருந்தி வாகனம் ஓட்டி காவலர்களிடம் சிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில், சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாகன சட்டத்தின்படி மது அருந்தி வாகனம் ஓட்டி வருபவருடன் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அதன் அடிப்படையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பலரும் அபராத ரசீதை பெற்றுக் கொண்டு அபராதத்தை செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அபராதம் விதிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து ஏலத்திற்கு விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Prasanth.K