1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (15:26 IST)

நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு கல்விக்கடன் முகாம்! – என்னென்ன ஆவணங்கள் தேவை?

நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கல்விக்கடன் சிறப்பு முகாமில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது.



தமிழ்நாட்டில் ஏராளமான பட்ட மற்றும் பட்டய படிப்புகளில் படிக்க வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற மாநில அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு கல்விக்கடன் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடைய ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பேன் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம், கல்வி சான்று, கல்லூரி கட்டண ரசீது, முதல் பட்டதாரி சான்று, கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளையும் தயாராக எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K